search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதிரியார் கைது"

    • ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் செக்ஸ் சில்மிஷததில் ஈடுபட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது.
    • அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜாஜிசை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் மங்களூரில் இருந்து சென்னை எழும்பூருக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. மங்களூரில் இருந்து இந்த ரெயில் காலை 8 மணியளவில் புறப்படும். அதேபோன்று சம்பவத்தன்றும் சென்னைக்கு புறப்பட்டது.

    இந்த ரெயிலின் பொதுப்பெட்டியில் ஏராளமான பயணிகள் இருந்தனர். மங்களூர் பண்ட்வால் பகுதியை சேர்ந்த ஜாஜிஸ் (வயது45) என்பவரும் பயணம் செய்தார். இவர் கோவையில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் பாதிரியாராக உள்ளார்.

    அந்த ரெயில் காஞ்சங்காடு ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்றபோது, பொதுப்பெட்டியில் பயணம் செய்த 35 வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் பாதிரியார் ஜாஜிஸ் செக்ஸ் சில்மிஷத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

    இதுகுறித்து அந்த பெண், தன்னுடன் பயணித்த கணவரிடம் தெரிவித்தார். அதுபற்றி கேட்டபோது பாதிரியார் அங்கிருந்து தப்ப முயன்றார். இதையடுத்து பாதிரியாரை சக பயணிகள் உதவியுடன் அந்த பெண்ணின் கணவர் பிடித்தார். பின்பு கண்ணூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்.

    ஓடும் ரெயிலில் பெண் பயணியிடம் செக்ஸ் சில்மிஷததில் ஈடுபட்டது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து ஜாஜிசை கைது செய்தனர்.

    • சென்னிமலை போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.
    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரவணனை போலீசார் கைது செய்தனர்.

    சென்னிமலை:

    ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கத்தக்கொடிக்காடு என்ற இடத்தில் கடந்த மாதம் 17-ந் தேதி கிறிஸ்தவ போதகரான அர்ஜூனன் என்கிற ஜான் பீட்டர் என்பவர் தனது வீட்டில் வழிபாடு நடத்தி கொண்டிருந்தார். அப்போது அங்கு வழிபாடு நடத்த அதே பகுதியை சேர்ந்த சிலர் எதிர்ப்பு தெரிவித்ததால் தகராறு ஏற்பட்டதோடு ஜான்பீட்டர் தாக்கப்பட்டார்.

    இதுகுறித்து சென்னிமலை போலீசார் தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதனிடையே தாக்குதல் சம்பவத்தை கண்டித்து சென்னிமலையில் கிறிஸ்தவ முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அந்த ஆர்ப்பாட்டத்தில் கிறிஸ்துவ முன்னணி அமைப்பின் மாநில தலைவர் சரவணன் கலந்து கொண்டு, சென்னிமலை முருகன் கோவில் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கூறப்படுகின்றது.

    இதையடுத்து செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கத்தை சேர்ந்த கிறிஸ்தவ முன்னணி அமைப்பின் மாநில தலைவரான சரவணன்(36), திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த பாதிரியார் ஸ்டீபன்(40) ஆகிய 2 பேர் மீதும் மதத்தை அவமதித்தல், மத கலவரத்தை தூண்டுதல் உட்பட 3 பிரிவுகளின் கீழ் சென்னிமலை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

    இதில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சரவணனை போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக இருந்த பாதிரியாரை போலீசார் தேடிவந்த நிலையில் நேற்று பாதிரியார் ஸ்டீபனை கைது செய்தனர். பின்னர் அவரை ஈரோடு ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோபியில் உள்ள மாவட்ட சிறையில் அடைத்தனர்.

    • சிறுமிக்கு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.
    • போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் செமவூன் ரம்பானை கைது செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோட்டயம் மாவட்டம் ஊன்னுக்கல் பகுதியில் ஒரு தேவாலயம் உள்ளது. இதில் பத்தனம் திட்டையை சேர்ந்த செமவூன் ரம்பான் (வயது 77) என்பவர் பாதிரியாராக உள்ளார். இந்தநிலையில் சம்பவத்தன்று பாதிரியார் அந்த பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

    இதுபற்றி தகவல் அறிந்த ஊன்னுக்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரித்தனர். பின்னர் சிறுமிக்கு பாதிரியார் பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது.

    இதனை தொடர்ந்து போலீசார் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து பாதிரியார் செமவூன் ரம்பானை கைது செய்தனர்.

    • குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகள் சிறுமி அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தினர்.
    • போலீசார் விசாரணை நடத்தியதில் பாதிரியார் ஷிமாயோன் ரம்பன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் உள்ள கந்தநாடு மறைமாவட்ட ஆலயத்தில் பாதிரியாராக இருந்தவர் ஷிமாயோன் ரம்பன் (வயது 77).

    இவர் பணியாற்றும் ஆலயத்திற்கு அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமி பிரார்த்தனைக்கு வருவார். அந்த சிறுமியை பாதிரியார் ஷிமாயோன் ரம்பன் அடிக்கடி தகாத வார்த்தைகள் பேசியதாக தெரிகிறது.

    மேலும் அந்த சிறுமிக்கு அவர் பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் கூறப்பட்டது. இது பற்றி அந்த சிறுமி, குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தார்.

    குழந்தைகள் பாதுகாப்பு குழும அதிகாரிகள் சிறுமி அளித்த புகார் தொடர்பாக விசாரணை நடத்தினர். பின்னர் இச்சம்பவம் குறித்து ஊன்னுக்கல் போலீசில் புகார் செய்தனர்.

    போலீசார் விசாரணை நடத்தியதில் பாதிரியார் ஷிமாயோன் ரம்பன் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • சைபர்கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.
    • மனுவை விசாரித்த நீதிபதி பாதிரியார் பெனட்டிக் ஆன்றோவை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியை சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). பாதிரியார். இவர் பெண்களுடன் இருக்கும் ஆபாச புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது.

    இந்த நிலையில் பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரன் பிரசாத்திடம் புகார் அளித்தார். இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். இதையடுத்து சைபர்கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இது தொடர்பாக பாதிரியாரை போலீசார் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். விசாரணைக்கு பிறகு மீண்டும் பாளை.ஜெயிலில் அவர் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் பாதிரியார் மீது மேலும் ஒரு கல்லூரி மாணவி ஒருவர் பாலியல் புகார் அளித்தார். அதன் பேரில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது சைபர் கிரைம் போலீசார் 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதற்காக நாகர்கோவில் ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் 2-வது கோர்ட்டில் சைபர் கிரைம் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.

    இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் இருந்து நாகர்கோவில் கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர். மனுவை விசாரித்த நீதிபதி பாதிரியார் பெனட்டிக் ஆன்றோவை ஒரு நாள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.

    இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.

    டி.எஸ்.பி. ராஜேந்திரன், இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் சைபர் கிரைம் போலீசார் பாதிரியாரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். ஏற்கனவே அவரது லேப் டாப்பில் இருந்த புகைப்படங்கள் குறித்த விவரங்களை அவர் தெரிவித்து இருந்தார். ஒரு பெண்ணை காதலித்ததாகவும் பாதிரியாராக இருந்ததால் அவரை திருமணம் செய்ய முடியவில்லை. எனவே நண்பர்களாக பிரிந்து விட்டோம் என்று கூறியிருந்தார். அதே பதிலையே தற்பொழுதும் அவர் அளித்துள்ளார்.

    அவரிடம் சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணைக்கு பிறகு இன்று மாலை பாதிரியார் பென டிக்ட் ஆன்றோ மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்த போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே நர்சிங் மாணவி கொடுத்த புகாரின் பேரில் உள்ள வழக்கில் பாதிரியார் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    • பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை சைபர் கிரைம் போலீசார் நேற்று போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள்.
    • பாதிரியார் பணியாற்றிய தேவாலயத்திற்கு அழைத்துச்சென்றும் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு அருகே சூழால் குடயால்விளையை சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ. இவர் மீது நர்சிங் மாணவி ஒருவர் அளித்த புகாரின்பேரில் பாதிரியார் மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பாதுகாப்பு கருதி பாளையங்கோட்டை ஜெயிலுக்கு மாற்றப்பட்டார்.

    பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள். இதையடுத்து அவரது லேப்-டாப் மற்றும் செல்போன் ஆதாரங்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவலில் எடுத்து விசாரிக்க சைபர் கிரைம் போலீசார் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர். கோர்ட்டு ஒரு நாள் காவல் வழங்கி உத்தரவு பிறப்பித்தது.

    இதை தொடர்ந்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை சைபர் கிரைம் போலீசார் நேற்று போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினார்கள். ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையில் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். லேப்-டாப்பில் இருந்த இளம்பெண்கள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தனர்.

    அப்போது அவர் அதில் உள்ள ஒரு பெண்ணை காதலித்ததாகவும் மற்றவர்களுடன் நட்பாகதான் பழகி வந்ததாகவும் கூறினார். இதை தொடர்ந்து போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை வீட்டிற்கு அழைத்து சென்றனர். அங்கு தடயங்கள் உள்ளதா? என்பது குறித்து சோதனை நடத்தப்பட்டது.

    பாதிரியார் பணியாற்றிய தேவாலயத்திற்கு அழைத்துச்சென்றும் விசாரணை மேற்கொண்டதாக தெரிகிறது. விசாரணைக்கு பிறகு பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

    பின்னர் அவரை போலீசார் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள். இதை தொடர்ந்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    • சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர்.
    • லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டது.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு அருகே பாத்திமா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29). பாதிரியாரான இவர் இளம்பெண்களுடன் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவியது. இந்த நிலையில் பேச்சிபாறையைச் சேர்ந்த 18 வயது மாணவி ஒருவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார்.

    இதுதொடர்பாக விசாரிக்க சைபர் கிரைம் போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார். சைபர் கிரைம் போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோமீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்ட பாதிரியார்பெனடிக்ட் ஆன்றோவை நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தினர்.அவரை வருகிற4-ந் தேதி வரை ஜெயிலில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

    இந்த நிலையில் பாதுகாப்பு கருதி அவரை பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர். பாதிரியாரிடமிருந்து கைப்பற்றப்பட்ட லேப்டாப் மற்றும் செல்போன் ஆதாரங்களை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் சைபர் கிரைம் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்தனர். இது தொடர்பாக கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிற்கு ஒரு நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சைபர் கிரைம் ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் இன்ஸ்பெக்டர் வசந்தி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு உள்ளனர். லேப்டாப் மற்றும் செல்போனில் இருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டது. மேலும் ஆபாச சாட்டிங் குறித்த விவரங்களையும் போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவிடம் கேட்டறிந்தனர். யார்? யாருடன் அவர் தொடர்பு வைத்திருந்தார் என்பது குறித்த விவரங்களும் கேட்கப்பட்டது.

    அதற்கு எந்த ஒரு தயக்கமும் இன்றி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பதில் அளித்தார். லேப்டாப்பில் இருந்த பெண் குறித்த விபரங்களை போலீசார் கேட்டபோது பாதிரியார் தான் அந்த பெண்ணை காதலித்து வந்ததாகவும் பாதிரியார் என்பதால் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்ள முடியவில்லை என்றும் இருவரும் விருப்பப்பட்டு பிரிந்து சென்றதாகவும் கூறினார்.

    தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். விசாரணை முடிந்து இன்று மாலை அவர் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தபடுகிறார்.

    • நாகர்கோவிலில் பதுங்கி இருந்த பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    • பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை காரணமாக பாதிரியார் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    நாகர்கோவில்:

    கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்கள் ஆபாச வீடியோ விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 29).

    கொல்லங்கோடு அருகே உள்ள சூழால்குடயால் விளை பகுதியைச் சேர்ந்த இவர், பாதிரியாராக பணியாற்றி வந்த நிலையில் தான் ஆபாச புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரது ஆபாச சாட்டிங், வீடியோ, போட்டோ சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    நாகர்கோவிலில் பதுங்கி இருந்த பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரிக்கவும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவும் போலீசார் திட்டமிட்டனர்.

    இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, திடீரென நாகர்கோவில் சிறையில் இருந்து, பாளையங்கோட்டை ஜெயிலுக்கு மாற்றப்பட்டு உள்ளார். பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினை காரணமாக அவர் மாற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த சூழலில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பெண்கள் புகார் அளித்த நிலையில், அதில் விசாரணைக்கு வரவேண்டிய இளம்பெண் ஒருவர், போலீசில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளதாக கூறப்படுகிறது. அவரை பிடித்து வாக்குமூலம் பெற போலீசார் திட்டமிட்டு உள்ளனர். மேலும் வழக்கு தொடர்பான ஆதாரங்கள், ஆவணங்கள் யாரிடமாவது இருந்தால், 84389 81930 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று குமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

    • போலீசாரின் விசாரணைக்கு எந்த ஒரு தயக்கமும் இன்றி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பதில் அளித்தார்.
    • சுமார் 15 நிமிடத்தில் போலீசாரின் கேள்விகள் அனைத்திற்கும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பதிலளித்து முடித்தார்.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு அருகே சூழால் குடயால் விளை பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ. இவர் இளம்பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியது. பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பெண்களிடம் ஆபாசமாக சாட்டிங் செய்ததும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் பேச்சிபாறை பகுதியைச் சேர்ந்த மாணவி ஒருவர் பாதிரியார் தன்னை பாலியல் ரீதியாக வாட்ஸ்-அப்பில் சாட்டிங் செய்து தொந்தரவு செய்வதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்தார்.

    இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்ததை யடுத்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார். பாதிரியாரை பிடிக்க ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் மேற்பார்வையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெனடிக்ட் ஆன்றோவை நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் வசந்தி ஆகியோர் அவரிடம் விசாரித்தனர்.

    போலீசாரின் விசாரணைக்கு எந்த ஒரு தயக்கமும் இன்றி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பதில் அளித்தார். லேப்-டாப்பில் உள்ள புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் குறித்த கேள்விகளை போலீசார் கேட்டனர். தன்னுடன் புகைப்படத்தில் நெருக்கமாக இருக்கும் பெண் தனது முன்னாள் காதலி என்றும் பாதிரியார் என்பதால் அவரை திருமணம் செய்ய முடியவில்லை. இருவரும் விருப்பப்பட்டு பிரிந்து விட்டதாகவும் கூறினார்.

    மேலும் ஆபாச சாட்டிங் குறித்த விவரங்களையும் போலீசார் கேட்டனர். ஒரே குடும்பத்தில் தாய், மகள், மருமகள் என 3 பேரிடம் பாதிரியார் சேட்டிங்கில் ஈடுபட்டிருந்தது தெரிய வந்தது. இது தொடர்பான விபரங்களையும் சைபர் கிரைம் போலீசார் கேட்டறிந்தனர். அதற்கும் எந்த ஒரு தயக்கம் இன்றி பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பதில் அளித்தார். போலீசாரின் அனைத்து கேள்விகளுக்கும் உடனுக்குடன் பதில் அளித்தார். சுமார் 15 நிமிடத்தில் போலீசாரின் கேள்விகள் அனைத்திற்கும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ பதிலளித்து முடித்தார்.

    இதைத்தொடர்ந்து போலீசார், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை நீதிபதி வீட்டில் ஆஜர்ப்படுத்தி நாகர்கோவில் ஜெயிலில் அடைத்தனர். இந்த வழக்கு தொடர்பாக பாதிரியார் கூறிய தகவல்களை வைத்து போலீசார் மேல் விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பாதிரியாருடன் நெருக்கமாக இருந்த பெண்ணிடமும் போலீசார் சில தகவல்களை கேட்டறிந்தனர். அவரும் அதற்கு உரிய பதில் அளித்தார். சமூக வலைதளங்களில் பரவும் தனது படங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீசாரிடம் அவர் கோரிக்கை வைத்தார்.

    போலீசார் இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தனர். இதற்கிடையில் பாதிரியாரின் லேப்-டாப் மற்றும் செல்போனில் இருந்த ஆபாச படங்கள் மற்றும் சாட்டிங்கை வெளியிட்டவர்கள் குறித்த விவரங்களை போலீசார் சேகரித்து வருகிறார்கள். ஏற்கனவே பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கொடுத்த புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மற்றொருவர் தலைமறைவாகி உள்ளார்.

    அவரிடம் தான் பாதிரியாரின் செல்போன் இருப்பது தெரியவந்துள்ளது. அவரையும் கைது செய்தால் தான் பாதிரியார் செல்போனில் என்ன விவரங்கள் உள்ளது என்ற முழு விவரமும் தெரியவரும். இதையடுத்து தலைமறைவாகியுள்ள அந்த நபரை பிடிக்க சைபர் கிரைம் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    போலீசார் தேடுவதை அறிந்த நபர் தற்பொழுது கேரளாவில் பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தனிப்படை போலீசார் அங்கு விரைந்துள்ளனர். அந்த நபரை கைது செய்த பிறகுதான் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    பாதிரியார் வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று டி.ஜி.பி. சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். அது தொடர்பான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டுள்ளனர். தற்போது கிடைத்துள்ள ஆதாரங்கள் சாட்சியங்களின் அடிப்படையில் குற்றப்பத்திரிகை தயார் செய்யும் பணி தொடங்கப்பட உள்ளது.

    இன்னும் இரு வார காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • மாஜிஸ்ட்ரேட் தாயுமானவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ வருகிற 4-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.
    • பாதிரியாரால் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    நாகர்கோவில்:

    கொல்லங்கோடு அருகே சூழால் குடயால்விளை பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ. இவர் இளம்பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோ காட்சிகள் மற்றும் போட்டோக்கள் ஆபாச சேட்டிங் போன்றவை சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவானார்.

    இந்த நிலையில் பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்த நர்சிங் மனைவி ஒருவர் பாலியல் ரீதியாக வாட்ஸ்-அப் சாட்டிங் செய்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தன்னை தொல்லை செய்வதாகவும் மிரட்டியதாகவும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் அளித்தார். இது தொடர்பாக விசாரிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார் .

    இதை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது ஐந்து பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தலைமறைவான பாதிரியாரை பிடிக்க ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் மேற்பார்வையில் 4 தனிப்படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை தேடி வந்தனர்.

    இந்த நிலையில் பாதிரியாரின் லேப்-டாப் போலீசாரிடம் சிக்கியது. அதில் ஏராளமான ஆபாச வீடியோக்கள் புகைப்படங்கள் இருந்ததை பார்த்து போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கோட்டில் சரண் அடைவதாக தகவல் பரவியது. இதனால் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    நேற்று பார்வதிபுரம் பகுதியில் வைத்து தனிப்படை போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அவரை நாகர்கோவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.

    அங்கு ஏ.டி.எஸ்.பி. ராஜேந்திரன் இன்ஸ்பெக்டர் வசந்தி மற்றும் போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டனர். முதலில் போலீசாரின் கேள்விகளுக்கு பாதிரியார் பதில் அளிக்க அளிக்க மறுத்தார். பின்னர் போலீசார் லேப்-டாப்பில் இருந்த புகைப்படங்கள் வீடியோக்கள் குறித்து கேள்விகளை எழுப்பினார்கள். அதற்கும் அவர் எந்த பதிலும் கூறவில்லை.

    ஆனால் புகைப்படங்களையும், வீடியோக்களையும் சமூக வலைதளங்களில் நான் வெளியிடவில்லை என்று கூறினார். மேலும் லேப்-டாப்பில் இருந்த ஆபாச வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் குறித்த விவரங்களை போலீசார் கேட்டறிந்தனர். அது தொடர்பான விவரங்களை போலீசாரிடம் பாதிரியார் தெரிவித்தார்.

    நான் எந்த பெண்ணையும் மிரட்டவில்லை என்றும் பாதிரியார் கூறினார். வீடியோவில் இருந்த பெண் ஒருவரை காதலித்து வந்ததாகவும் அவரை திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். ஆனால் பாதிரியார் என்பதால் திருமணம் செய்ய முடியாது இதையடுத்து எனது பாதிரியார் பதவியை ராஜினாமா செய்து விட்டு திருமணம் செய்யலாமா என்று நினைத்தேன். ஆனால் வீட்டில் ஒப்பு கொள்ளவில்லை.

    இதையடுத்து நாங்கள் இருவரும் பேசி பிரிந்து விட்டோம். அதன்பிறகு அந்த பெண்ணுக்கு கடந்த ஆண்டு இறுதியில் திருமணம் நடந்தது. அதன் பிறகு எங்களுக்கிடையே எந்த ஒரு தொடர்பும் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

    பல மணி நேர விசாரணைக்கு பிறகு போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு அவரை நாகர்கோவில் மாஜிஸ்திரேட் வீட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்ட்ரேட் தாயுமானவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ வருகிற 4-ந்தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து பாதிரியார் நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டார். நாகர்கோவில் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை சைபர் கிரைம் போலீசார் காவல் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே லேப்டாப், செல்போனை கைப்பற்றிய போலீசார் அதிலிருந்து பல ஆதாரங்களை திரட்டி உள்ளனர். அது தொடர்பான முழு விவரங்களை திரட்டும் வகையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை காவல் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர்.

    பாதிரியாரை காவலில் எடுத்து விசாரித்தால் தான் முழு விவரமும் தெரிய வரும் என்று சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். பாதிரியாரால் பாதிக்கப்பட்டவர்கள் சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளிக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் லேப்டாப்பை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
    • தேவாலயம் வரும் பெண்களிடம் ஆதரவாக பேசி, அவர்களை தன் வலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ வீழ்த்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்றோ (வயது 27), பாதிரியார்.

    தக்கலை அருகே உள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றிய இவர், அங்கு வரும் பெண்களிடம் தகாத முறையில் பேசி வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ, பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள், போட்டோக்கள் மற்றும் சாட்டிங் வாசகங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

    பெண்ணுக்கு உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுப்பது, நிர்வாண நிலையில் படுத்தபடி வீடியோ காலில் பேசுவது போன்றவை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ தலைமறைவாகி விட்டார்.

    அவர் பல பெண்களுடன் தகாத உறவு வைத்திருப்பதாகவும், அவர்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோவை காட்டி மிரட்டல் விடுத்து வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட பேச்சிப்பாறையை சேர்ந்த நர்சிங் மாணவி ஒருவர், கன்னியாகுமரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ மீது புகார் கொடுத்தார்.

    இதனை தொடர்ந்து சைபர் கிரைம் போலீசார் விசாரணையில் இறங்கினர். அவர்கள், பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் லேப்டாப்பை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில் 80-க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் மற்றும் பெண்களுடனான போட்டோக்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் சில வீடியோக்கள் அழிக்கப்பட்டு இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

    அதனை ரெகவரி சாப்ட்வேர் மூலம் மீட்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டனர். பல்வேறு குறைகளை சொல்லி தேவாலயம் வரும் பெண்களிடம் ஆதரவாக பேசி, அவர்களை தன் வலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ வீழ்த்தி இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை பிடிக்க போலீஸ் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர், கேரளா அல்லது பெங்களூருவுக்கு தப்பியிருக்கலாம் என்ற தகவலின் பேரில் தனிப்படையினர் அங்கு சென்று தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

    இந்த நிலையில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கோர்ட்டில் சரண் அடைய திட்டமிடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கோர்ட்டுகளையும், போலீசார் கண்காணித்து வந்தனர்.

    இந்த சூழலில் குமரி மாவட்டத்தில் ஆய்வுக்கு வந்த போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, இந்த வழக்கின் விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை உடனடியாக பிடிப்பது தொடர்பாக அதிரடியாக போலீசாருக்கு சில ஆலோசனைகளையும் வழங்கினார்.

    அதன்பேரில் பாலமுருகன், திருமுருகன், கிறிஸ்டி உள்பட 4 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் கூடுதல் தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படையினர் பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தினர்.

    மேலும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவின் செல்போன் சிக்னல்கள் மூலம் அவரது நடமாட்டத்தையும் கண்காணித்தனர். இந்த நிலையில் இன்று காலை பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ நாகர்கோவிலில் பதுங்கியிருப்பது தனிப்படையினருக்கு தெரியவந்தது.

    இன்று காலை அங்கு அதிரடியாக சென்ற தனிப்படை போலீசார் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவை கைது செய்தனர். பின்னர் அவரை ரகசிய இடத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுடன் எத்தனை பெண்கள் தொடர்பில் இருந்தனர்? அவர்களுடனான ஆபாச வீடியோ மற்றும் போட்டோக்களை செல்போன், லேப்டாப்களில் பதிவு செய்தது ஏன்? அவை சமூக வலைதளங்களில் வெளியானது எப்படி? என்பது குறித்து போலீசார் அவரிடம் கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோவுக்கு வேறு யாரும் உடந்தையாக செயல்பட்டார்களா? என்பது குறித்தும் விசாரணை நடந்து வருகிறது.

    • பாதிரியார் ஆலயத்திற்கு வந்த மைனர் சிறுவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது.
    • போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் ஜோசப் கொடியன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கொச்சியை அடுத்த எடம்படம் ஆலயத்தில் பாதிரியராக இருப்பவர் ஜோசப் கொடியன்.

    இவர் ஆலயத்திற்கு வந்த மைனர் சிறுவன் ஒருவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் கூறப்பட்டது.

    இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி பாதிரியார் ஜோசப் கொடியன் மீது போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×